அனுஷ்காவுக்கு ஓகே சொன்ன விஜய்

வேறு யாருமல்ல... 'இரண்டு' படத்தில் இரு நாயகிகளில் ஒருவராக வந்து கவர்ச்சியில் கலக்கி எடுத்த அனு்காதான். தெலுங்கின் முன்னணி நாயகியான இந்த முன்னாள் யோகா டீச்சர்தான், இப்போது விஜய்க்கு காதல் பாடமெடுக்க வருகிறார்.
தரணியின் உதவியாளர் பாபுசிவன் இயக்கும் வேட்டைக்காரன் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. இப்போது வில்லு படத்தை முடித்துவிட்ட விஜய், பாபு சிவனுடன் அமர்ந்து, வேட்டைக்காரன் பட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைர்களை முடிவு செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் இலியானாதான் ஜோடியாக நடிப்பார் என சொன்னார்கள். ஆனால் சம்பளம் - தேதிகள் இரண்டுமே ஒத்துவரவில்லை. அடுத்து ப்ரியாமணி நடிப்பார் என்றார்கள். ஆனால் அவர் ஒத்து வரமாட்டார் என்று விஜய் கூறிவிட, இப்போது அவர் சம்மதத்துடன் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஏற்கெனவே இரு தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அனுஷ்கா. அதில் ஒன்று கார்த்தி நடிக்க ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் படம்.
தெலுங்கில் கவர்ச்சியில் பின்னி பெடல் எடுத்துக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











