நடிகை ஸ்ரீதேவிகாவுக்கு கல்யாணம்!

ராமகிருஷ்ணா என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ரீதேவிகா. அந்தப் படத்துக்குப் பிறகு அந்த நாள் ஞாபகம், அன்பே வா மற்றும் சமீபத்தில் வெளியான ஞாபகங்கள் போன்ற படங்களில் அவர் நடித்தார். ஆட்டோகிராப் படத்தின் கன்னட ரீமேக்கிலும் நடித்தார்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவிகா. இவருக்கும் ரோஹித் என்பவருக்கும் வரும் 27-ம் தேதி சனிக்கிழமை திருமணம் நடக்கிறது. மணமகன் ரோஹித்தும் பாலக்காட்டைச் சேர்ந்தவர்தான். மும்பையில் பைலட்டாக இருக்கிறார்.
பாலக்காட்டில் உள்ள பிரசன்ன லட்சுமி கல்யாண மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு திருமணம் நடக்கிறது.
திரையுலகினருக்கு பத்திரிகை தருவதில் மும்முரமாக உள்ளார் ஸ்ரீதேவிகா.
Comments


Click it and Unblock the Notifications