கார்த்திகாவுக்கு டும் டும் டும்!

இது கல்யாண சீசன். நிறைய நடிகர், நடிகைகளுக்கு கல்யாணப் பேச்சுக்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக மலையாள நட்சத்திரங்கள் இருவருக்கு விரைவில் கல்யாணம் நடக்கப் போகிறது.
முதலில் கல்யாணப் பேச்சில் அடிபட்டவர் கோபிகா. இப்போது கார்த்திகாவும் கல்யாணத்திற்குத் தயாராகி விட்டார்.
இவர் தூத்துக்குடி நாயகி கார்த்திகா அல்ல. நம்நாடு படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடித்தவர்தான் இந்த கார்த்திகா. இவருக்கும், இங்கிலாந்தில் வசிக்கும் மலையாள தொழிலதிபர் ஒருவருக்கும் இடையே கடந்த மாதம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாம். இன்னும் 2 மாதங்களில் கெட்டி மேளம் கொட்ட தீர்மானித்துள்ளனறாம்.
இந்த திருமணம் குறித்து கார்த்திகா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை இல்லை. ஆனால் சில மலையாள இதழ்களில் இதுகுறித்து விரிவாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கல்யாணம் முடிவாகியுள்ளதால் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை வேகமாக முடித்துக் கொள்ளுமாறு இயக்குநர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம் கார்த்கிகா.
தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் கார்த்திகா. ஒன்று புலன் விசாரணை -2. இதில் அவரது காட்சிகளை ஷூட் செய்து முடித்து விட்டார்கள். அடுத்து சேரனுடன் ராமன் தேடிய சீதை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதுதவிர மலையாளத்தில் 3 படங்களில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் இரண்டு படங்கள் முடிந்து விட்டன. மேலும் புதிய பட வாய்ப்புகளையும் நிராகரித்து வருகிறாராம்.
எங்கிருந்தாலும் வாழ்க!


Click it and Unblock the Notifications











