மீண்டும் அமலா பால் ஆகும் சிந்து சமவெளி நாயகி அனகா

By Sudha

சிந்துசமவெளி படத்தால் ஏற்பட்ட சர்ச்சையால் ரொம்பவே கிலியாகிப் போன அதன் நாயகி அனகா, தனது பெயரை மாற்றியதால்தான் இப்படியோ என்று பயந்து போய் விட்டாராம். இதனால் தனது பெயரை மீண்டும் அமலா பால் என்றே மாற்ற முடிவு செய்துள்ளாராம்.

அமலா பால் என்ற பெயரில்தான் முதலில் நடிக்க வந்தார் அனகா. இரண்டு படங்களிலும் நடித்தார். ஆனால் அடையாளமே இல்லாமல் போய் விட்டன அந்தப் படங்கள். இதையடுத்து சிந்துசமவெளி பட வாய்ப்பு கிடைத்தது. இப்படத்துக்காக தனது பெயரை அனகா என்று மாற்றிக் கொண்டார்.

ஏற்கனவே ஒரு அமலா இருந்ததால் தனது பெயரை மாற்றினார். ஆனால் சிந்துசமவெளி படத்தால் ஏற்பட்ட பெரும் சர்ச்சைகளால் கலங்கிப் போய் விட்டார் அனகா. இதனால் தனது பெயரை மீண்டும் அமலா பால் என்று மாற்ற திட்டமிட்டுள்ளாராம்.

தற்போது தான் நடித்துள்ள மைனா படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளார் அனகா. இப்படத்துக்குப் பின்னர் அமலா பால் என்ற பெயரிலேயே நடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் அனகா.

பெயரை மாற்றினாலும் மாற்றாவிட்டாலும் தரமான நடிப்பைக் கொடுக்காவிட்டால் ரசிகர்கள் மாற்றி விடுவார்களே, அதையும் மனதில் கொள்ளுங்கள் 'மைனா'...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X