மாளவிகா 'என்னைத் தொடு'

ஒரு காலத்தில் கவர்ச்சியிலும், நடிப்பிலும் கலக்கியவர் மாளவிகா. அவர் பாடி நடித்த கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதிலிருந்து விலகாமல் உள்ளது. அதன் பின்னர் அவருக்கு பெரிய ஏற்றத்தைக் கொடுத்தது வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாட்டுக்கு அவர் போட்ட அசத்தல் ஆட்டம்.
கதாநாயகியாக நடித்ததை விட, கவர்ச்சிக் காட்டியதை விட இந்த இரு பாடல்கள்தான் மாளவிகாவின் அசைக்க முடியாத அடையாளங்களாக உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகிச் சென்றார் மாளவிகா. கையோடு குழந்தையும் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் சினிமாவை நாடவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார் மாளவிகா.
எம்.ஜி.ஆர். நம்பி இயக்கும் என்னைத் தொடு படத்தில் நடிகை மாளவிகாவாகவே அவர் நடிக்கிறார். இவர் நிலா, சந்திரலேகா ஆகிய படங்களை இயக்கியவர்.
இப்படத்தில் தனக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து தொடர்ந்து நடிப்பது குறித்து தீர்மானிக்கப் போகிறாராம் மாளவிகா.


Click it and Unblock the Notifications











