நடிகை மீரா வாசுதேவனுக்கு விவாகரத்து அளித்தது சென்னை கோர்ட்

மும்பையில் வசித்து வந்தவர் மீரா வாசுதேவன். கிரிக்கெட் தொடர்பான விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் சினிமா நடிகையானார். தமிழில் உன்னைச் சரணடைந்தேன் படத்தில் நடித்தார். இருப்பினும் பெரிய நடிகையாக ஜொலிக்க முடியாமல் போனது. டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அவருக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 2005ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கடந்த 2008ம் ஆண்டு திடீரென விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார் மீரா. அதேசமயம், மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி விஷால் பதில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து சமரச மையத்திற்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து நேற்று இருவருக்கும் நீதிபதி ராமலிங்கம் விவாகரத்து அளித்து உத்தரவிட்டார்.
தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் எதிர்பார்க்கவில்லை என்று மீரா கூறியதால் ஜீவனாம்சம் வழங்கும்படி விஷாலுக்கு கோர்ட் உத்தரவிடவில்லை.


Click it and Unblock the Notifications











