மலையாளத்தில் டோர்னமன்ட் ஆடும் ரூபா மஞ்சரி
தமிழில் வாய்ப்புகள் சரிவர இல்லாமல் போனதால் மலையாளத்திற்குள் புகுந்துள்ளார் திருதிரு துருதுரு பட நாயகி ரூபா மஞ்சரி.
இயக்குநர் லால் இயக்கும் புதிய இளமைப் பட்டாளத்துடன் கூடிய டோர்னமன்ட் என்ற படத்தில் நடிக்கவுள்ளாராம் ரூபா. ஏகப்பட்ட பேரைப் பார்த்து கடைசியில் ரூபாவை செலக்ட் செய்துள்ளார் லால். இப்படத்தில் எட்டு பசங்களும், ஒரு பொண்ணும் ஹீரோக்கள், ஹீரோயினாக நடிக்கவுள்ளனர்.
ரூபா மஞ்சரி நடித்த முதல் படம் திருதிரு துருதுரு. படம் நன்றாகப் பேசப்பட்டாலும் சரியாக ஓடவில்லை. இந்த நிலையில்தான் மலையாளத்தில் புகுந்துள்ளார் ரூபா.
பெங்களூர், மைசூர், கேரளாவில் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். கிறிஸ்துமஸுக்கு வருகிறதாம் டோர்னமன்ட்.
Comments
actress roopa manjari திருதிரு துருதுரு பட நாயகி ரூபா மஞ்சரி நடிகை ரூபா மஞ்சரி மலையாளத்தில் ரூபா மஞ்சரி director lal thiru thiru thuru thuru heroine roopa manjari tournament movie


Click it and Unblock the Notifications