twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'டபுள்ஸ்' ஆட விரும்பும் ஸ்ருதி!

    By Chakra
    |

    Shruthi
    கவர்ச்சியானாலும் சரி, ஹோம்லியாக இருந்தாலும் சரி, எப்படி வேண்டுமானாலும் நடிக்க நான் தயார் என்று கூறுகிறார் சான்டல்வுட்டிலிருந்து (கன்னட சினிமா) கோலிவுட்டுக்கு வந்துள்ள ஸ்ருதி.

    சமர்த்தாக பெங்களூரில் பி.காம் படித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதி சினிமா உலகின் புதிய சிங்கார நாயகி. காதலர் குடியிருப்பு (முன்பு காவலர் குடியிருப்பு என பெயர்) என்ற படத்தின் நாயகிதான் இந்த ஸ்வீட் ஸ்ருதி.

    வந்த வேகத்தில் தமிழ், கன்னடம், மலையாளத்தில் புகுந்து புறப்பட்டிருக்கிறார் ஸ்ருதி. கன்னத்தில், சோனு என்ற பெயரில் நடிக்கிறாராம். தமிழில் மட்டும் ஸ்ருதிதானாம்.

    இங்கே ஏகப்பட்ட ஸ்ருதிகள் குவிந்து கிடக்கிறார்களே என்று கேட்டால், அதற்கென்ன, எனது பெயர் ஸ்ருதிதான். அதில்தான் நடிப்பேன், பெயரை மாற்ற மாட்டேன் என்கிறார் படு தில்லாக.

    சரி உங்களோட பிளான் (பில்டிங்கா கட்டப் போறாங்க) என்ன என்று கேட்டால், எனக்கென்று எந்த கட்டுப்பாடும் இல்லை. கவர்ச்சியாகவும் நடிப்பேன், ஹோம்லியாகவும் நடிப்பேன். இப்படித்தான் நடிப்பேன் என்று தேவையில்லாமல் பிடிவாதம் பிடிக்க மாட்டேன். அதேசமயம், அதீத கவர்ச்சி எனக்கு ஆகாது என்கிறார் சற்றே தெளிவாக.

    ஆனால் ஹோம்லியாக நடிப்பதுதான் எளிதானது என்கிறார். கவர்ச்சிகரமாக நடிப்பது எல்லோருக்கும் சரியாக வராது, சவாலானது அது என்றும் அனலிட்டிகலாக பேசுகிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X