'கருங்காலி'யை நம்பும் சுனிதா!

By Chakra

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுனிதா வர்மாவுக்கு பட வாய்ப்பு வந்துள்ளது. இரு ஹீரோயின் சப்ஜெக்ட்டாக இருந்தாலும் சந்தோஷமாக ஏற்று நடித்து வருகிறாராம்.

6.2 படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் சுனிதா வர்மா. கவர்ச்சிகரமான நடிப்பில் கலக்கியிருந்த அவர் ஒரு பாடலில் படு கவர்ச்சிகரமாகவும் நடித்து இளசுகளின் மனங்களை பிசைந்தெடுத்தார்.

ஒருமுறை சொல்லி விடு, இருவர் மட்டும் ஆகிய படங்களிலும் நடித்திருந்த சுனிதா வர்மாவுக்கு, எல்லாம் சிறப்பாக அமைந்தும் பட வாய்ப்புகள் மட்டும் சரியாக இல்லை.

இந்த நிலையில் மு.களஞ்சியம் இயக்கி நடிக்கும் கருங்காலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை சந்தோஷமாக ஏற்று நடித்து வருகிறார் சுனிதா.

இப்படத்தில் டாக்டர் வேடத்தில் வருகிறாராம் சுனிதா வர்மா. உண்மையில் இந்த வேடத்தில் நடிக்க வேண்டியவர் பூமிகா. ஆனால் திடீரெ கதையில் சில மாற்றங்களைச் செய்தார் களஞ்சியம். அந்த மாற்றத்திற்குப் பூமிகா பொருந்தி வரவில்லை. இதையடுத்தே சுனிதாவை தேடி வந்ததாம் வாய்ப்பு.

இப்படத்தில் அஞ்சலி நாயகியாக நடிக்கிறார். அஸ்மிதாவும் படத்தில் இருக்கிறார். இத்தனை பேர் இருந்தாலும் எனது கேரக்டரும் பேசப்படும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சுனிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X