மீண்டும் அஜீத்-நயனதாரா!

ஐங்கரன் கருணாமூர்த்தி தயாரிப்பில், நடிகர் அருண்பாண்டியன் இணை தயாரிப்பில், அல்டிமேட் ஸ்டார் அஜீத், கனவுக் கன்னி நயனதாரா நடிக்கும் படம் புதிய படம் ஏகன்.
பில்லா படத்தின் வெற்றிக்குப் பிறகு, வெற்றி ஜோடியான அஜீத்- நயன்தாரா நடிக்கும் படம் இது.
ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்த இந்தியாவின் புகழ்பெற்ற நடன இயக்குநர்களில் ஒருவரான ராஜூ சுந்தரம் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் முதல் திரைப்படம் ஏகன்.
சுகாசினி மணிரத்னம், ஜெயராம், நாசர், சுமன், எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீமன், உள்பட பலர் நடிக்கின்றனர்.
இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் அறிந்தும் அறியாமலும் புகழ் இளம் நாயகன் நவ்தீப் நடிக்கிறார். இவர் இளவட்டம் படத்தில் தனி நாயகனாக கவர்ச்சி இளவரசி ஷீலாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். முதல் முறையாக சூப்பர் ஹீரோ ஒருவருடன் இணைந்து நடிக்கிறார்.
இந்தி - தமிழ் படங்களில் தனி முத்திரை பதித்த பிரபல ஒளிப்பதிவாளர் அர்ஜூன் ஜனா ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த ஆண்டு அதிக படங்களில் இசையமைத்த பெருமை பெற்ற யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
பாபா, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் இப்படத்தின் வசனத்தை எழுதவுள்ளார்.
சண்டைப் பயிற்சி ஸ்டன் சிவா, கலை இயக்கம் மிலன்.
தயாரிப்பு மேற்பார்வையை சேகர் கவனிக்க, ஆறுச்சாமி தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பாளராக செயல்படுகிறார் டைமண்ட் பாபு.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே 15 நாட்கள் ஹாங்காங்கில் நடந்து முடிந்தது. தமிழ் சினிமா வரலாற்றில் ஹாங்காங்கில் படப்பிடிப்பைத் தொடங்கி தொடர்ந்து நடத்தப்பட்ட ஒரே படம் ஏகன்தான்.
அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்தில் நடைபெற உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











