'தடை' பயம்- விளக்கம் தந்த ஆசின்

ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் உள்ள தமிழ் அமைப்புகள் மீது கன்னட அமைப்புகள் தாக்குதல் நடத்தின. தமிழ்ப் படங்களைத் திரையிட்ட தியேட்டர்களும் அடித்து நொறுக்கப்பட்ன.
அதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட நடிகர்-நடிகைகள் திரளாக கலந்துகொண்டார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், திரைப்பட தொழிலாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோரும் பங்கேற்றார்கள்.
உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளாத நடிகர்- நடிகைகளிடம் விளக்கம் கேட்டு, நடிகர் சங்கம் சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
அதற்கு விளக்கம் அளித்து பெரும்பாலான நடிகர்- நடிகைகள் பதில் கடிதம் அனுப்பி விட்டார்கள். ஆனால், மும்பையில் முகாமிட்டு கஜினி' (இந்தி) படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை ஆசின் மட்டும் விளக்க கடிதம் அனுப்பாமல் இருந்தார். இதனால் அவருக்கு கோலிவுட்டில் தடை விதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந் நிலையில் ஆசின் ஓடி வந்து விளக்க கடிதம் தந்துள்ளார்.
அந்த கடிதத்தில் ஆசின் கூறியிருப்பதாவது:-
நான், நட்சத்திர தூதராக பொறுப்பேற்றிருந்த நிறுவனம் மும்பையில் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், உண்ணாவிரதத்தில் பங்கேற்க முடியவில்லை. அதற்காக என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் தமிழ் திரையுலகமும், நடிகர் சங்கமும் நடத்துகிற நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











