ஆசின் வீட்டு வேலைக்காரப் பெண் மாயம்

சென்னை தேனாம்பேட்டை கருணாநிதி காலனியை சேர்ந்தவர் நர்சம்மா என்கிற நகோமி. இவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில், எனது மகள் பியூலா (21) கடந்த 5 வருடங்களாக சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நடிகை அசின் வீட்டில் வேலை பார்த்து வருகிறார்.
வாரம் 3 முறை என்னை வந்து பார்த்து விட்டுச் செல்வார். சில நாட்களாக அவர் வீட்டுக்கு வரவில்லை. அசின் வீட்டில் சென்று கேட்டபோது நடிகை அசினுடன் மும்பைக்கு சென்று இருப்பதாகவும் ஒருவாரத்தில் வந்து விடுவார் என்றும் கூறினார்கள். ஒருவாரம் கழித்து சென்று மீண்டும் கேட்டபோது சரியாக பதில் ஏதும் சொல்லவில்லை.
எனது மகளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. எனது மகளை மீட்டுத் தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ஆசினிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் தீர்மானித்து அவரது வீட்டை அணுகினர். ஆனால் ஆசின் வீட்டில் இல்லை. ஆசின் மும்பையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தொலைபேசி மூலமும் ஆசினைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆசினிடம் விசாரணை நடத்த அவரை தொடர்பு கொள்ள போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.


Click it and Unblock the Notifications