மன்னிப்பு கேட்பாரா ஆசின்?

By Sudha

Asin
நடிகர் சங்க பொதுக் குழுக்கூட்டத்தில் நடிகர்கள் ராதாரவியும், சத்யராஜும், ஆசினுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துப் பேசியதைத் தொடர்ந்து மன்னிப்பு ஒன்றைக் கேட்டுக் கொண்டு ஆசின் தப்பித்துக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆசின் இலங்கைக்குப் போனது குறித்து நடிகர் சங்கம் தெளிவான நிலையில் இல்லை. ஆரம்பத்தில் ராதாரவி ஆசினைக் கடுமையாக கண்டித்தார். அவர் மீது தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறினார்.

ஆனால் நேற்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் நடிகர், நடிகையர் எங்கு வேண்டுமானாலும் போவார்கள். அதை யாரும் மிரட்டக் கூடாது என்று கூறி தீர்மானமே போட்டுள்ளனர்.

நடிகர் கருணாஸுக்கு நாம் தமிழர் அமைப்பு விடுத்த எச்சரிக்கையின் பின்னணியில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், இது நாம் தமிழர் அமைப்புக்கு எதிரானதாக கருதப்படுகிறது. இருப்பினும் இதை வைத்து நடிகை ஆசினும் கூட தப்பலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

நேற்றைய கூட்டத்தில் ஆசினுக்குக் கண்டனம் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராதாரவியும், சத்யராஜும் மட்டுமே கண்டனம் தெரிவித்துப் பேசினர். சங்கத் தலைவரான சரத்குமார், ஆசின் இலங்கைக்குப் போனதை தவறு என்று கூறவில்லை. மாறாக, இலங்கை அதிபரின் மனைவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதை மட்டுமே தவறு என்றார்.

இந்த நிலையில், தற்போது ஆசின் மன்னிப்பு கேட்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தற்போது ஆசின் ரெடி படப்பிடிப்பை முடித்துக் கொண்டும், தனது இலங்கை சுற்றுலாவை முடித்துக் கொண்டும் மும்பை திரும்பி விட்டார். விரைவில் விஜ்ய பட படப்பிடிப்புக்காக சென்னைக்கு வர வேண்டியுள்ளது.

அதில் சிக்கல் ஏதும் நேராமல் தவிர்ப்பதற்காக நடிகர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டு ஒரு கடிதத்தைக் கொடுத்து நிலைமையை சகஜமாக்கி விடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நடிகர் சங்கமும் கூட இதை பெரும் பிரச்சினையாக்க விரும்பாதது போலவே தெரிகிறது. ஆசின் மன்னிப்பு கேட்டால் பிரச்சினையை சுமூகமாக முடிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர், நடிகையர் இலங்கைக்கு செல்லலாமா, வேண்டாமா என்பது குறித்து விரைவில் திரையுலக கூட்டுக் குழு கூடி ஆராயவுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X