ஆசின் வைக்கும் பார்ட்டி

மலையாளத்திலிருந்து கிளம்பி தெலுங்கு, தமிழ் என தேட்டையைப் போட்ட நடிகை ஆசின் இப்போது இந்தியில் குடியேறியுள்ளார்.
தனது சாமர்த்தியத்தால் முதலில் அமீர்கான், பிறகு சல்மான் கான், அடுத்து அபிஷேக் பச்சன் என விஐபி நடிகர்களோடு வெள்ளித் திரையில் விளையாடி வருகிறார்.
இன்று ஆசினுக்கு 25வது பிறந்த நாள். இதை சிறப்பாக கொண்டாடுகிறார் ஆசின். பாலிவுட்டுக்கு வந்த பின்னர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால் தடபுடலாக இருக்கிறாராம் ஆசின்.
நேற்று முதலே ஆசின் தனது பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்து விட்டார். இன்று பாலிவுட்டின் பிரபலங்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனராம்.
இன்று பாலிவுட் பிரபலங்களுக்கு பெரிய விருந்தாக வைக்கவுள்ளாராம்.
ஏணியாக இருந்து ஏற்றி விட்ட தமிழ்த் திரையுலகினருக்கு இந்த பார்ட்டியில் இடம் இல்லை என்று தெரிகிறது.
தற்போது அசுதோஷ் கோவரிகரின் புதிய படத்தில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஆசின். இப்படத்தில் முதலில் ஐஸ்வர்யா ராய்தான் அபிஷேக்கின் ஜோடியாக நடிக்கவிருந்தார். ஆனால் டேட்ஸ் இல்லாததால் ஆசின் வந்து விட்டார்.
மும்பையிலிருந்து காற்று வாக்கில் வந்த ஒரு செய்தி... அசின் மீது வியர்வை நாற்றம் ஓவராக இருக்கிறதாம். என்ன சென்ட் போட்டாலும் வேலைக்காகவில்லையாம். வெற்றிகரமான நடிகை என்ற முத்திரை விழுந்து விட்டதால் இவரைத் தவிர்க்க முடியவில்லை. அதனால் நல்ல பெர்ப்யூம் போட்டுக் கொண்டு வந்து பெர்பார்ம் பண்ணுங்க என்று ஹீரோக்கள் ரெக்கமன்டேஷன் செய்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications











