நக்மா போரடிச்சுருச்சாம்!

By Staff

Nagma
போஜ்புரி ரசிகர்களுக்குத் திரும்பத் திரும்ப ரவிகிஷன், நக்மா, மனோஜ் திவாரி ஆகியோரின் முகங்களைப் பார்த்துப் பார்த்து போரடித்து விட்டதாம். புதுமுகங்கள் நிறைய அறிமுகமாக வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்களாம்.

இந்தியாவில் திரைப்படங்கள் எடுக்கப்படும் மொழிகளில் போஜ்புரியும் ஒன்று. மிகக் குறைந்த அளவிலான ரசிகர் கூட்டமே உண்டு என்றாலும் கூட மிக மிக விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திரையுலகம் போஜ்புரி படவுலகம்.

பீகார், உ.பியைத் தாண்டி இந்த மொழிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இல்லை. இருந்தாலும் கூட அடுத்தடுத்து படங்களை எடுத்து ரிலீஸ் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

போஜ்புரி படங்கள் என்றவுடன் நினைவுக்கு வருபவர் அந்த மொழிப் படங்களின் சூப்பர் ஸ்டாரான ரவி கிஷன்தான். இதையடுத்து மனோஜ் திவாரி மற்றும் நக்மா ஆகியோரும் போஜ்புரியில் பிசியாக இருக்கும் பிற கலைஞர்கள்.

இந்த மூன்று பேரும்தான் போஜ்புரி படங்களின் அடையாளங்களாக உள்ளனர். இவர்கள் இல்லாமல் ஒரு போஜ்புரி படம் கூட வராது என்ற நிலை. இதனால் போஜ்புரி ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனராம். இவர்களை விட்டால் வேறு ஆளே இல்லையா என்று போரடித்துப் போய்க் கேட்கிறார்களாம்.

இதுகுறித்து போஜ்புரி படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரிஷி சர்மா கூறுகையில், திரும்பத் திரும்ப மனோஜ் திவாரி, ரவி கிஷன் முகத்தைப் பார்த்து போஜ்புரி மக்கள் போரடித்துப் போய் விட்டார்கள்.

பாலிவுட் உள்ளிட்ட துறையுடன் மோதுவதற்கு போஜ்புரி திரையுலகில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. முதலில் நிறைய புது ஹீரோக்கள், ஹீரோயின்கள் வர வேண்டும். பரந்த மனப்பான்மைக்கு போஜ்புரி சினிமா மாற வேண்டும். குறுகிய வட்டத்துக்குள் உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றியமைக்க வேண்டும்.

அப்போதுதான் பாலிவுட்டுடன் போஜ்புரி படங்கள் போட்டியிட முடியும். பீகார், உ.பியையத் தாண்டியும் போஜ்புரி படங்கள் போக முடியும் என்றார் சர்மா.

ரிஷி சர்மா போஜ்புரியில் பல படங்கள் தயாரித்த அனுபவ தயாரிப்பாளர் என்று நினைத்து விட வேண்டாம். இப்போதுதான் போஜ்புரியில் முதன் முதலாக ஒரு படத்தைத் தயாரித்துள்ளார் சர்மா. மாரே கரஜ்வா கே தீர் (என் இதயத்தை துளைத்து விட்டாய் என்று பொருள்) என்ற படத்தை இவர் தயாரித்துள்ளார். அடுத்த மாதம் உலகெங்கும் இதை திரைக்கு வருகிறதாம்.

இது ஒரு முக்கோண காதல் கதையாம். நேஹா சர்னா, பிரியா பீட்டர் ஆகியோர் ஹீரோயின்களாகவும், ஹித்தேந்தர் ஹீரோவாகவும் நடித்துள்ளனர். இந்த மூன்று பேருமே புதுமுகங்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X