புதிய பட்டாம் பூச்சி..பாக்யா!

ஹாலந்தைச் சேர்ந்த ஜெகன் என்பவர் தயாரிக்கும் படம்தான் அகம் அறிய ஆவல். இப்படத்தின் பன்ச் லைனாக பார்க்கிங் பார் லவ் என வைத்துள்ளனர். ஏவி.எம். பிள்ளையார் கோவிலில் பூஜையைப் போட்டுப் படத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஜெய்பாண்டியன் என்பவர் இயக்குகிறார். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் 11 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
படத்தில் நாயகியாக நடிக்கிறார் பாக்யா. மலையாளத்தில் இரு படங்களில் நடித்துள்ள பாக்யாவுக்கு தமிழில் இது முதல் படம். பார்க்க பளிச்சென மஞ்சள் கிழங்கு போல மகா அழகாக இருக்கிறார் பாக்யா.
பிறப்பு கேரளாவாக இருந்தாலும் வளர்ப்பு, வார்ப்பு எல்லாம் குஜராத்தாம். எனவே பாக்யாவுக்கு மலையாளம் தவிர குஜராத்தி, இந்தியும் அத்துப்படியாம். இந்தப் படத்தில் நடிக்க புக் ஆன உடனேயே மற்றும் என்று ஒரு படத்திலும் புக் ஆகி நடித்து வருகிறாராம் பாக்யா.
பல மலையாள அழகிகளுக்கு வாழ்க்கை கொடுத்த கோலிவுட் தனக்கும் ஏற்றம் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளார் பாக்யா.
படத்தின் நாயகன் சந்தோஷ். இவர், காதல் செய்ய விரும்பு, ஒரு காதல் செய்வீர், திருரங்கா, மிட்டாய் என நான்கு படங்களில் நடித்துள்ளார். இவருக்கு உடலில் மச்சம், மெகா சைஸில் இருக்கும் போல. இதுவரை நடித்துள்ள அனைத்துப் படங்களிலும் புதுப் புது நாயகிகளுடன் ஜோடி போட்டுள்ளார் சந்தோஷ்.
படம் குறித்து ஜெய் பாண்டியன் கூறுகையில், ஆக்ஷனும், சென்டிமென்ட்டும் கலந்த கலவை இப்படத்தின் கதை. ஒரு விவசாயக் குடும்பம் மைசூருககு இடம் பெயருகிறது. அங்கு நடக்கும் நிகழ்வுகள்தான் படத்தின் கதையாம்.
இப்படத்தின் கதையை இன்டர்நெட் மூலம் தயாரிப்பாளர் ஜெகனுக்குச் சொல்லி அவரது சம்மதத்தைப் பெற்றாராம் ஜெய்பாண்டியன்.
அகம் அறிய ஆவல் காமெடி டிராக் படு வித்தியாசமாக இருக்கிறது. இதுவரை பல்வேறு கேரக்டர்களில் நடித்துள்ள நிழல்கள் ரவி முதன் முதலாக முழு நீள காமெடி டிராக்கில் கலக்கப் போகிறார். அவருடன் இணைந்து கடிக்கவிருப்பது சந்தானம், பாண்டு மற்றும் மனோபாலா.
அகம் நிறைந்த வாழ்த்துக்கள் பாண்டி!


Click it and Unblock the Notifications











