'அழகிய போலீஸ்' பாவனா!

இந்தப் படத்தில் பாவனாவுக்கு போலீஸ் வேடம்.
சும்மா... ரெண்டு சீனில் போலீஸ் டிரஸ், மீதி சீன்களில் கனவுப் பாட்டுக்கு ஆடுவது போன்ற படம் இல்லை பிரதர் இது. முழுக்க முழுக்க போலீஸ் கெட்டப்பில் கலக்க வேண்டிய ரோல்.
அதனால, நல்ல சாப்பாட்டு 'ராமியான' நான் கஷ்டப்பட்டு வாயைக் கட்டி வயித்தைக் கட்டி இந்த அளவு உடம்பை ட்ரிம்மா (!) வச்சிருக்கேன். நேரம் கெட்ட நேரத்துல சிக்கன், ஐஸ்க்ரீம்னு சொல்லி வெறுப்பேத்திடப் போறீங்க... என்கிறார் உருட்டிவிட்ட சோழிகளைப்போல சிரித்தபடி.
தெலுங்கில் ஜோடி யாரு...
நித்தினுக்கு ஜோடியாக நடிக்கிறேன். ஆனாலும் இது ஒரு ஹீரோயின் ஓரியண்டட் கதை. எத்தனை போலீஸ் கதை பார்த்திருக்கேன். பின்னிட மாட்டேன், எனும் பாவனா, தெலுங்கில் மேலும் இரு படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளாராம். தமிழில்? ஒரேயொரு படம்தான்!
அக்கட தேசத்துல அடுத்த விஜயசாந்தி ஆயிடுவாங்களோ...


Click it and Unblock the Notifications











