விஜேந்தருடன் 'டேட்டிங்': பிபாஷா கொடும்பாவி எரிப்பு

ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் குமார் அரை இறுதியில் தோல்வியுற்று வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் அரை இறுதிக்கு தகுதி பெற்ற பின்னர் அளித்திருந்த ஒரு பேட்டியில் தனக்குப் பிடித்த நடிகை பிபாஷா பாசு என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து பிபாஷா பாசுவிடம் சில செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விஜேந்தர் தங்கப் பதக்கம் வென்றால் அவருடன் ஒரு முழுவதும் டேட்டிங் போக நான் தயார் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிபாஷா பாசுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியாணா மாநிலம் யமுனா நகரில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பிபாஷாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
பிபாஷா டேட்டிங் போகத் தயார் என்று கூறியதால் விஜேந்தரின் கவனம் திசை திரும்பி விட்டது. இதனால்தான் அவரால் தங்கம் வெல்ல முடியாமல் போய் விட்டது என்று கொடும்பாவியை எரித்தவர்கள் கோபத்துடன் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











