ஐந்தாம் படையில் தேவயானி!

குஷ்பு தயாரிக்க அவரது கணவர் சுந்தர் சி நாயகனாக நடிக்கும் ஐந்தாம் படையில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்து தேவயானியிடம் கேட்டபோது, மீண்டும் பெரிய திரைக்கு வருவதில் எனக்குக் கொஞ்சம் தயக்கமிருந்தது.
என் கணவர் இயக்கும் திருமதி தமிழ் (தேவயானிதான் தயாரிப்பாளர்) படத்தில் மட்டும் வழக்கறிஞர் பாத்திரத்தில் நடித்து வந்தேன். இதைக் கேள்விப்பட்ட என் தோழி குஷ்பு, தனது ஐந்தாம் படையில் முக்கிய பாத்திரத்தில் நடித்தே தீரவேண்டும் என அன்புக் கட்டளையிட்டு விட்டார். அதைத் தட்ட முடியவில்லை.
சிம்ரனுக்கும் எனக்கும் மிக முக்கியமான வேடங்களைக் கொடுத்துள்ளார் இயக்குநர். இந்த இரு படங்களுக்கும் கிடைக்கப் போகும் வரவேற்பைப் பொறுத்துதான், அடுத்தடுத்த படங்களை முடிவு செய்யப் போகிறேன், என்கிறார் தேவயானி.
வாங்க.. மீண்டும் வண்ணக் கோலம் போடுங்க!
Comments


Click it and Unblock the Notifications