மாளவிகாவுக்கு இயக்குநர் எச்சரிக்கை

By Staff

Malavika
தயாரிப்பாளர் செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி கார்த்தீகை படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய கர்ப்பிணி மாளவிகாவுக்கு இப்போது அப்படத்தின் இயக்குநர் வீரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

படப்பிடிப்பில் கலந்து கொண்டு மீதமுள்ள காட்சிகளை முடித்துக் கொடுக்காவிட்டால் ரூ.75 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் என கூறியுள்ளார்.

விக்ரமாதித்யா கதாநாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தில் கதாநாயகிகளாக மாளவிகா, சமிக்ஷா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை டைரக்டர் வீரா இயக்குகிறார். ஆஞ்சநேயலு தயாரிக்கிறார்.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் 5 மாத கர்ப்பமாக இருக்கும் மாளவிகா கலந்து கொண்டு நடித்தார். கர்ப்பிணியான அவர் நடனமாடும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது, டான்ஸ் மாஸ்டர் அசோக்ராஜ் கடுமையான நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்ததாகவும், அதற்கு மாளவிகா ஒப்புக் கொள்ளாமல் கேரவனுக்குள் போய்விட்டாராம்.

அவரைச் சமாதானப்படுத்துவதற்காக தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு கேரவனுக்குள் சென்றார். சில நிமிடங்களில் தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு என்னை செக்சுக்கு அழைத்தார், என் வயிற்றில் கைவைத்து அழுத்தினார் என்று மாளவிகா அழுதபடி ஓடினார்.

யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஐதராபாத்திலிருந்து விமானத்தில் மும்பைக்கு பறந்து விட்டார். தயாரிப்பாளர் ஆஞ்சநேயலுவோ, மாளவிகாவை சமாதானப்படுத்தவே கேரவனுக்குள் சென்றேன். அவரிடம் தவறாக நடக்கவில்லை' என்று விளக்கம் அளித்தார். இது பற்றி நடிகை மாளவிகா, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் புகார் செய்தார்.

இதேபோல் நடிகை மாளவிகா மீது, தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு, தமிழ்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், மாளவிகா பாதியிலேயே படப்பிடிப்பில் இருந்து ஓடிவிட்டதாகக் கூறியிருந்தார்.

நடிக்க மாட்டேன்!

இதனிடையே, இனிமேல் கார்த்தீகை படத்தில் நடிக்க மாட்டேன்' என்று மாளவிகா திட்ட வட்டமாக்க் கூறிவிட்டார்.

இதனால், அவர் மீது ரூ.70 லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு அறிவித்தார்.

இந்த நிலையில், படத்தின் டைரக்டர் வீரா நேற்று நிருபர்களைச் சந்தித்து நடந்தது என்ன என்று விளக்கினார். அவர் கூறியதாவது:

மாளவிகா ஒப்புக் கொண்டபடி கார்த்தீகை படப்பிடிப்பில் கலந்து கொண்டு உடனடியாக படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும்.

இல்லையென்றால், படத்திலிருந்து அவரை நீக்கிவிட்டு வேறொரு நடிகையை நடிக்க வைப்போம். இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரை இன்று சந்தித்துப் பேசுகிறேன். வேறு நடிகையைப் போடும் பட்சத்தில் ஏற்படும் நஷ்டத்தை மாளவிகாதான் ஈடு செய்ய வேண்டும். எனவே அவர் நஷ்ட ஈடாக ரூ.75 லட்சம் தரவேண்டும், என்றார் வீரா.

யார் சொல்வது உண்மை என்பதைக் கண்டுபிடிக்கவே தனி கமிஷன் வைக்கணும் போலிருக்கே...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X