காக்க வைக்கும் சங்கீதா!

கிட்டத்தட்ட ரிட்டயர்மெண்ட் கட்டத்துக்கு வந்தாலும், அவருக்கும் வாய்ப்புகள் வந்துகொண்டே உள்ளன. அப்படி கிடைத்த வாய்ப்பு ஒன்றுதான், பத்திரிகையாளரும் இயக்குநருமான புகழேந்தி தங்கராஜ் இயக்கும் புதிய படம்.
இதில் முக்கிய வேடம் சங்கீதாவுக்கு. அவருடைய பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் வெளிநாட்டுக்குப் பறக்கத் தயாராகிவிட்டாராம்.
பதறிப் போனார் இயக்குநர். காரணம், முக்கியமான சில காட்சிகளை எடுக்க வேண்டியுள்ளதாம் இன்னும். ஓரிரு நாள் கால்ஷீட் இருந்தா முடிச்சிடுவேன் என்று புகழேந்தி கேட்க, ம்ஹூம் அதெல்லாம் ஆகாது. நான் போய் வரும் வரை காத்திருங்கள் என்று கூறிவிட்டாராம் அம்மணி. திரும்பி வர குறைந்தது ஒரு மாதமாகுமாம்!
Comments


Click it and Unblock the Notifications