சாக்சியின் கவர்ச்சி கொடி

By Staff

Sakshi Gulati
ராம் கோபால் வர்மாவின் மோதிரக் கையால் குட்டுப்பட்ட எந்த நடிகையும் சோடை போனதில்லை. அந்த வரிசையில் புதிதாக சேர்ந்துள்ளார் 'கான்டிராக்ட்' சாக்சி குலாத்தி.

ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள கான்டிராக்ட் படத்தில் சாக்சி குலாத்தி கவர்ச்சியில் கலங்கடித்துள்ளார்.

வர்மாவின் தொடர்ச்சியான 3வது தாதா படம் கான்டிராக்ட். இப்படத்தில் சாக்சியை அறிமுகப்படுத்தியுள்ளார் வர்மா.

ஆனால் தான் வெறும் கவர்ச்சிப் பதுமையல்ல, நடிப்புக்குத்தான் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்கிறார் சாக்சி.

கான்டிராக்ட் படத்தில் எனது கவர்ச்சி பேசப்படும். அதேசமயம், எனது நடிப்பும் பாராட்டப்படும். வெறும் கவர்ச்சி பொம்மை அல்ல நான் என்கிறார் சாக்சி.

மாடல் அழகியாக இருந்து நடிகையாக மாறியவர் சாக்சி. 2006ம் ஆண்டு நடந்த மிஸ் டெல்லி போட்டியில் வாகை சூடியவர். கடந்த ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியில் இறுதிவரைமுன்னேறியவர்.

கான்டிராக்ட் குறித்து சாக்சி கூறுகையில், ராம் கோபால் வர்மாவின் முந்தைய தாதா படங்களான சத்யா, கம்பெனி வரிசையில் இப்படமும் ஒரு தாதா படம்தான்.

எனக்கு இப்படத்தில் நடிப்புடன் கூடிய நல்ல வேடம். வெறும் பாடல்களுக்கு குலுக்காட்டமும், உடல் அங்கங்களை வெளிக்காட்டும் கவர்ச்சி பரேடும் எனக்கு இதில் இல்லை. நடிக்கவும் எனக்கு நல்ல வாய்ப்பு கொடுத்துள்ளார் ராமு.

இயா என்ற கேரக்டரில் நான் நடித்துள்ளேன். கொள்ளைக்காரன் ஒருவனுடன் தொடர்புடைய பெண் நான். தாதாக்கள் உலகில் வாழ்ந்து வரும் பெண் நான். அதேசமயம், எனக்கும் ஒருகாதல் கதை உண்டு. எனவே நடிப்புக்கு நல்ல களம் இது.

வசனங்களிலும், உணர்ச்சிகளைக் காட்டுவதிலும் நான் நிறையவே தேறியிருப்பதாக ராமு பாராட்டினார். அது எனக்கு விருது கிடைத்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ராம் கோபால் வர்மா வெறும் இயக்குநர் மட்டுமல்ல. சகல கலைகளிலும் பிரமிக்க வைக்கிறார். தனக்கு என்ன வேண்டும் என்பதை நேரடியாக கூறி விடுகிறார். தெளிவாக பேசுகிறார். நினைத்ததை வாங்காமல் விட மாட்டார்.

அவர் சொன்னதைப் புரிந்து கொண்டு, அவர் நினைத்தபடி நடித்துக் கொடுத்ததால் என் மீதுஅவருக்கு நிறைய நம்பிக்கை வந்து விட்டது. கான்டிராக்ட் மிகப் பெரிய படமாக அமையும்.

எனக்கு இப்படத்தில் நிறைய அனுபவங்கள். நிறைய கற்றுக் கொண்டேன். ராம்கோபால் வர்மாவும் நிறைய கற்றுக் கொடுத்தார். அனுபவித்து நடித்தேன் என்கிறார் சாக்சி.

டெல்லி அழகியான சாக்சி, மும்பைக்கு பேஷன் பரேடுக்காக வந்த இடத்தில்தான் சாக்சியைப் பார்த்து தனது படத்திற்கு புக் செய்தாராம் ராம் கோபால் வர்மா.

இன்னொரு கவர்ச்சிப் புயல்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X