'எடுப்பான' அழகுக்கு சிலிக்கான் தயவை நாடினாரா இலியானா?!

By Staff

Ileana
கடந்த சில தினங்களாக ஆந்திர சினிமா உலகில் பரபரப்பாக பேசப்படுவது, எடுப்பான முன்னழகு வேண்டி சிலிக்கான் சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆலோசனை பெற்று வருகிறார் இலியானா என்பதுதான்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை இலியான. கோடிகளில் சம்பளம், அதே அளவு ரசிகர்களின் எண்ணிக்கை என்று உச்சத்திலிருக்கிறது மார்க்கெட்.

செயற்கை முறையில் முன்னழகை பெரிதாக்கிக் கொள்ள பமீலா ஆண்டர்ஸன் ரேஞ்சுக்கு இவரும் சிலிக்கன் சிகிச்சையை நாடுவதாக செய்திகள் கசிந்தன மீடியாவில். அதுபற்றி இலியானாவும் எந்த மறுப்பும் சொல்லாததால் இணையதளங்கள், பத்திரிகைகளில் இதுபற்றிய செய்திகள் பிரதான இடம் பிடித்தன.

சமீபத்தில் சென்னையில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு வந்திருந்த இலியானாவிடம் இதுபற்றி வெளிப்படையாகவே கேட்டுவிட்டனர் சில நிருபர்கள்.

ஆனால் அவரோ சற்றும் அதிராமல், நிதானமாக இப்படிச் சொன்னார்:

"எனது முன்னழகைப் பெரிதாக்கிக் காட்ட சிலிக்கன் ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டிய அவசியமில்லை. என்னைப் பார்த்தால் அப்படியொரு தேவை இருப்பதுபோலவா தெரிகிறது உங்களுக்கு?" என்று திருப்பிக் கேட்டார்.

சில விநாடிகள் கழித்து, "இப்போதுள்ள எனது உடல் அழகுதான் எனக்குப் பிடிக்கிறது. இது மற்றவர்களுக்கும் பிடித்தால் சந்தோஷம். இல்லாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்? நான் இயற்கையான அழகுடன் இருக்கவே விரும்புகிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X