மணிரத்னம் பாராட்டினாக...பாலிவுட்ல கூப்பிட்டாக...!-லேகா

By Staff

Lekha Washington
ஜெயம் கொண்டான் படத்தில் நடித்த லேகா, இந்தி சினிமாவுக்குப் போகிறாராம். படம் பார்க்க இல்லீங்க... படத்தில் நடிக்க!

ஜெயம் கொண்டான் படத்தில் நாயகியான பாவனாவை விட, அதிக புகழ் இரண்டாவது நாயகியாக நடித்த லேகா வாஷிங்டனுக்குத்தான்.

அந்தப் புகழ் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகளை தேடித் தந்துள்ளதாம். மணிரத்னம் போன்ற ஜாம்பவான்களே அழைத்துப் பாராட்டுகிறார்களாம் லேகாவின் நடிப்பை.

இதுகுறித்து லேகா வாஷிங்டன் இப்படிக் கூறுகிறார்:

ஜெயம் கொண்டான் படத்தைப் பார்த்துவிட்டு எனது நடிப்பை இயக்குநர் மணிரத்னம் பாராட்டினார். பெருமையாக இருந்தது.

இப்படத்தில் ஹீரோயின் வேடம் இல்லாவிட்டாலும் ஹீரோயினைவிட அதிக காட்சிகளில் நடித்தேன். நடிப்புக்கும் முக்கியத்துவம் இருந்தது. ஆனால் இனி ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன். ஜெய் ஜோடியாக ராக்கோழி படத்தில் நடிக்க உள்ளேன்.

இதன் ஷ¨ட்டிங் இப்போதைக்கு தொடங்காது. அதனால் இடையில் ஒரு இந்தி படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்கள். இது குறித்து பேச்சு நடத்த மும்பை செல்கிறேன்.

ஹோம்லி, கிளாமர் என எந்த வட்டத்துக்குள்ளும் நான் சிக்க விரும்பவில்லை. நல்ல கதை, நல்ல படக்குழு, எனது வேடம் இதுதான் எனக்கு முக்கியம். மற்றபடி கிளாமர் காட்டுவதற்கு இதுதான் அளவு என நான் எதையும் வைத்துக் கொள்ளவில்லை.

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சாகச பயற்சிகளில் ஈடுபடுவது எனக்குப் பிடிக்கும். சமீபத்தில் லண்டனில் ஹெலிகாப்டரிலிருந்து பாராசூட் மூலம் குதிக்கும் பயிற்சி பெற்றேன். இதுபோன்ற காட்சிகள் இடம்பெறும் ஆக்ஷன் படத்தில் நடிக்கவும் விரும்புகிறேன், என்கிறார் லேகா.

எதுக்கும் தெலுங்கு தேசம் பக்கம் ஒரு அப்ளிகேஷன் போட்டு வைங்க... விஜயசாந்தி இடம் இன்னும் காலியாகத்தான் இருக்காம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X