மாளவிகாவுக்கு ஆண் குழந்தை!

உன்னைத்தேடி படத்தில் அஜீத் ஜோடியாக அறிமுகமாகி, வெற்றிக் கொடி கட்டு, சித்திரம் பேசுதடி என தமிழில் பிரபல நாயகியாகத் திகழ்ந்தவர் மாளவிகா.
இவருக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சுமேஷ் மேனனுக்கும், 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
நேற்று காலை அவருக்கு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த தகவலை நடிகை மாளவிகா தன் உதவியாளர் மூலம் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்தார். குழந்தைக்கு ஆரோவ் மேனன் என்று பெயர் சூட்டவிருப்பதாக மாளவிகா கூறினார்.
Comments


Click it and Unblock the Notifications