பாலிவுட் போகும் மம்தா

அந்த வகையில், அசின், ஜெனிலியா, சதா, ஷ்ரியா, த்ரிஷா.... லேட்டஸ்டாக ப்ரியாமணி வரிசையில் சேரப் போகிறார் மம்தா மோகன்தாஸ்.
மலையாள நடிகையான இவர் தமிழில் மூன்று படங்களில் நடித்தார். ஆனால் ஒன்றில்கூட சோபிக்கவில்லை. சூப்பர் ஸ்டாருடன் குசேலனில் நான்கு காட்சிகளில் வந்தார். அந்தப் படமும் ஓடவில்லை.
தெலுங்கில் நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் உள்ள மம்தாவுக்கு, இன்னும் பெரிய அளவு வாய்ப்புகள் இல்லையே என்ற ஆதங்கம். இதனால் இப்போது பாலிவுட்டுக்குள் நுழைய சரியான சந்தர்ப்பம் பார்த்து வந்தார்.
எந்த மாதிரி வேடத்திலும் நடிக்கத் தயார் என்று கூறுவது போன்ற ஒரு பக்கா ஆல்பத்தை தயார் செய்து மும்பையில் உள்ள ஒரு பிஆர்ஓ மூலம் அனுப்பி வைத்தார். கைமேல் பலன் கிடைத்துள்ளதாம் ஆல்பத்துக்கு.
இந்திப் படம் ஒன்றில் நடிக்க பேச்சு நடந்து வருகிறதாம். விரைவில் அறிவிப்பு வரும் என்கிறார் மம்தா, தெரிந்தவர்களிடமெல்லாம்.
'ஏ...எல்லாரும் நல்லா பாத்துக்கங்க... நானும் பாலிவுட்டுக்குப் போறேன், பாலிவுட்டுக்குப் போறேன்...


Click it and Unblock the Notifications











