தமிழ் பேசும் ஐஸ்வர்யா!

தமிழை கற்றுக் கொண்டு மிகச் சரியாக அதை உச்சரிக்கும் அவரது திறமையைப் பார்த்து தான் மிக வியந்து போனதாக மணி ரத்னம் தெரிவித்துள்ளார்.
மணிரத்னத்தின் இந்தப் படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்ப் படத்தில் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.
தமிழுக்கான படப்பிடிப்பின் போது ஐஸ்வர்யாவின் வசன உச்சரிப்பும், தமிழை அவர் பேசும் லாவகமும் தன்னை வியக்க வைத்துவிட்டதாக மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஏற்கெனவே ஜீன்ஸ் மற்றும் இருவர் ஆகிய படங்களில் ஐஸ்வர்யா நடித்துள்ள போதிலும், அதன் பிறகு பல ஆண்டுகள் அவர் தமிழ்ப் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. ஆனாலும் டச் விட்டுப் போகாமல் தமிழை அட்சர சுத்தமாக அவர் பேசுவது வியப்பைத் தருவதாக அவர் கூறினார்.
Comments


Click it and Unblock the Notifications