மீனாளுக்கு புதுப் படம்!

By Staff

Meenal
தவமாய் தவமிருந்து படத்தின் லைம் லைட்டோடு காணாமல் போன மீனாளுக்கு மீண்டும் ஒரு படம் கிடைத்துள்ளது. ஆனால் அவர் நாயகி இல்லை.

தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் அண்ணியாக வந்து போனார் மீனாள். சின்ன கேரக்டர் என்றாலும் கூட மீனாளும் பேசப்பட்டார். இதையடுத்து அவரைத் தேடி பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார். ஆனால் வந்தவையெல்லாம் கிளாமர் வாய்ப்புகள்தான்.

இதனால் புதுப் படங்களை ஒப்புக் கொள்ளாமல் யோசித்து வந்த மீனாள், வேறு வழியில்லாமல் ஒரு படத்தில் நல்ல கிளாமரோடு கூடிய வேடத்தை ஏற்று நடித்தார். படம் என்ன ஆனது என்றுதான் தெரியவில்லை.

இந்த நிலையில் மீனாளுக்குப் புதுப் படம் கிடைத்துள்ளது. கந்தன் குமரன் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் மீனாள் முக்கிய வேடத்தில் தலை காட்டுகிறாராம்.

இளைஞர்களை மையமாகக் கொண்ட படமாம் இது. ஆனால் நல்ல கருத்துடன் படத்ைத எடுக்கவிருக்கிறார்களாம். மீனாளின் கேரக்டரும் படத்தில் பேசப்படுமாம்.

படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பது ரதீஷ், அவருக்கு ஜோடி ரூபஸ்ரீ. இருவருமே புதுமுகங்கள்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் படப்பிடிப்பை தொடங்கி வேகமாக போய்க் கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X