தயக்கம் போக்கிய மீரா

By Staff

Meera jasmine with Gajan
புதுமுக ஹீரோ கஜனுடன் ஆதி நாராயணா படத்தில் நடித்து வரும் மீரா ஜாஸ்மின், காதல் காட்சிகள், பாடல் காட்சிகளில் தயக்கமின்றி நடிக்குமாறு கஜனுடன் சகஜமாக பேசி ரிலாக்ஸ் செய்து நடிக்க உதவி செய்து வருகிறாராம். சொல்லிப் பூரிக்கிறார் கஜன்.

முன்னணி நாயகர்களுடன் நடித்துக் கொண்டிருந்த மீரா இப்போது தடாலடியாக புதுமுகத்திற்கு ஜோடியாகியுள்ளார். ஆதி நாராயணா படத்தில் புதுமுகம் கஜனுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் மீரா.

பிரபல நடிகையாச்சே மீரா, எப்படி நடிப்பது என்ற சங்கோஜத்தில் இருந்து வந்தாராம் கஜன். அவரது தயக்கத்ைதப் புரிந்து கொண்ட மீரா, கஜனிடம் சகஜமாக பேசி அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து, இயல்பாக நடியுங்கள் என்று அட்வைஸ் கொடுத்தாராம்.

அத்தோடு நில்லாமல், பாடல் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் அவரது வெட்கத்தைப் போக்கி இயல்பாக நடிக்க உதவினாராம். அவரது பெருந்தன்மையான போக்கால் நெகிழ்ச்சி அடைந்த கஜனுக்கு இப்போது வெட்கம், தயக்கம் போய் விட்டதாம். இயல்பாக மீராவுடன் நடித்து வருகிறாராம்.

இதன் காரணமாக மீரா, கஜன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படு இயல்பாக அமைந்திருக்கிறதாம். கஜன் மட்டுமல்ல படக்குழுவினரும் பூரித்துப் போயுள்ளனர்- மீராவின் போக்கால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X