விக்கி அழுத மித்ரா!

கேரளத்து நாயகிதான் மித்ரா. கந்தா படத்தில் கரணுடன் இணைந்து நடித்து வருகிறார்.
பார்க்க படு க்யூட்டாக இருக்கும் மித்ராவுக்கு, இந்த டான்ஸ்தான் சரியாக வருவதில்லையாம்.
சமீபத்தில் ஒரு பாடல் காட்சியைப் படமாக்கியுள்ளனர். மித்ராவுக்கு சில ஸ்டெப்ஸ்களைப் போட்டுக் காட்டிய நடன இயக்குநர், அது சரியாக செய்ய வராததால், எளிமையான சில ஸ்டெப்ஸ்களை போட்டுக் காட்டியுள்ளார்.
அதையும் சரியாக செய்ய முடியாமல் திணறியுள்ளார் மித்ரா. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் சரமாரியாக திட்டி விட்டாராம். இதனால் மித்ரா கலங்கிப் போய் கண்ணீர் விட்டு அழுது விட்டாராம்.
விக்கி விக்கி அவர் அழுததைப் பார்த்து யூனிட்டே அச்சச்சோ என்று சோகமாகி விட்டதாம்.
அனைவரும் கூடி மித்ராவை ஆறுதல்படுத்தி, ஆசுவாசப்படுத்தினராம். பின்னர் நடன உதவியாளரை வைத்து மித்ராவுக்கு நன்றாக பயிற்சி கொடுத்து, அதன் பின்னர் அவர் ஆட, பாடல் காட்சி படமானதாம்.
புதுமுகம் என்பதால் நடன அசைவுகளுக்கு தடுமாறுகிறாராம் மித்ரா.
நடனத்தில் தடுமாறலாம், நடிப்பில் தடுமாறினால்தான் சிக்கல்.


Click it and Unblock the Notifications











