'ஏய் ...' நமீதா!

By Staff

Namitha
'மச்சான்ஸ்' என்ற வார்த்தையை நமீதா அடிக்கடி பயன்படுத்தினாலும் அவருக்கு ரொம்பப் பிடித்த வார்த்தை 'ஏய்'... என்பதுதானாம்.

நமீதாவை பலருக்கும் பிடிக்கும், ஆனால் நமீதாவுக்கு என்னென்ன பிடிக்கும்?

அதை அவரே தனது திருவாயால் மலர்ந்தருளியுள்ளார் - கோவையில். கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நமீதாவின் டான்ஸ் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த நமீதா அங்கு செய்தியாளர்களிடம் மனம் விட்டுப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நமீதாவுக்கு மிகவம் பிடித்த விளையாட்டு கிரிக்கெட்டாம். ஒரு வேளை நடிக்க வராமல் போயிருந்தால் ஸ்போர்ட்ஸில் புகுந்து பெரிய வீராங்கனையாகியிருப்பாராம்.

வேகமாக கார் ஓட்டினால் நமீதாவுக்குப் பிடிக்காதாம். வாழ்க்கை மிகவும் குறுகிய காலம். அதில் முடிந்தவரை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் நமீதாவின் பாலிசியாம்.

தம் அடிப்பது, தண்ணி அடிப்பது, போதை வஸ்துக்களை நுகர்வது போன்றவை எல்லாம் நமீதாவுக்கு அறவே பிடிக்காத ஐட்டங்கள். இதுபோன்ற பழக்கம் உள்ளவர்களிடம் நமீதா வைத்துக் கொள்ளவே மாட்டாராம்.

குழந்தைகள் என்றால் நமீதாவுக்கு ரொம்ப இஷ்டமாம். அதிலும் உடல் ஊனமுற்ற, சிறப்பு குழந்தைகள் என்றால் உயிராம். அவர்களிடம் செலுத்தும் அன்பும், பாசமும், கடவுளுக்கு செலுத்தும் காணிக்கைக்கு சமம் என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

தமிழ் இப்பதான் கொஞ்சம் கொஞ்சம் வாயில் வருகிறதாம். ரொம்பப் பிடித்த வார்த்தை ஏய் என்பதுதானாம்.

சரி யாருடன் நடிக்க ஆசை என்று கேட்டால் வேறு யார் ரஜினிதான், வாய்ப்பு கிடைத்தால் என்ன கேரக்டராக இருந்தாலும் நடிக்க ரெடி என்கிறார் நமீதா. அப்புறம் நமீதாவின் மனம் கவர்ந்த தமிழ்ப் பட நாயகன் விஷால்தானாம்.

ஒரே உயரம் என்பதால் இருக்குமோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X