நமீதாவும், பணமும்!

பெரும்பாலான நடிகைகள், ஷாப்பிங் செய்ய வந்தால், அவர்கள் கையில் பணம் இருக்கிறதா என்பது பற்றிக் கவலைப்படாமல், சரக்குகளை அள்ளி வழங்கி அனுப்புவார்கள் கடைக்காரர்கள். லம்ப் ஆக பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.
ஆனால் சிலர் இதை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு வெறும் கையுடன் கடைக்கு வந்து கை நிறையப் பொருட்களுடன் திரும்பிச் செல்வார்கள் - பணத்தைக் கொடுத்து அனுப்புவதாக கூறி.
இதேபோல நகைக் கடை, ஜவுளிக் கடை திறப்பு போன்றவற்றுக்கு செல்லும் நடிகைகளுக்குப் பரிசாகவும், நிறைய பொருட்கள் கிடைத்து விடும் - ஓசியில்.
ஆனால் நமீதாவைப் போன்ற சிலர் இதற்கு விதி விலக்காக இருக்கிறார்கள். நமீதா கடைகளுக்குப் போகும்போது கை நிறையப் பணத்துடன்தான் செல்வாராம். குறைந்தது ரூ. 15,000வது அவரிடம் இருக்குமாம்.
இதுதவிர கை நிறைய கிரெடிட் கார்டுகளையும் வைத்திருப்பாராம். என்ன சாமான் வாங்கினாலும் பாக்கி வைக்காமல் செட்டில் செய்து விட்டுத்தான் திரும்புவாராம்.
இதை விட முக்கியமாக, தனியாக கொஞ்சம் பணத்தையும் கையில் வைத்திருப்பாராம். போகும் இடத்தில் ஏழைகள் யாராவது கண்ணில் பட்டால் அவர்களுக்கு கை நிறையப் பணம் கொடுப்பது நமீதாவின் நல்ல பழக்கமாம். அவர்களுக்குத் தேவையானவற்றை கேட்டறிந்து தனது ரசிகர் மன்றம் மூலமாகவும் உதவுகிறாராம்.
நமீதாவுக்கு உண்மையிலேயே தாராள மனசுதான்!


Click it and Unblock the Notifications











