யாரையும் அண்ணா என்று அழைக்க மாட்டேன்! - நமீதா

நமீதா மோகினியாக நடிக்கும் ஜகன்மோகினி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ். கார்டனில் நடந்தது. நமீதா மோகினியாகவும், வடிவேல் நாதஸ்வர வித்வானாக-நமீதாவின் அண்ணனாகவும் நடிக்கும் காட்சி படமாகிகயது.
படப்பிடிப்பு இடைவேளையில், நமீதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
"வடிவேலுவும், நானும் பல படங்களில் சேர்ந்து நடித்து இருக்கிறோம். 4 வருடங்களுக்குப்பின், இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறோம்.
வடிவேலுவின் நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய 'காமெடி'யை இந்த படத்தில் சேர்க்கும்படி நான்தான் இயக்குநரிடம் சொன்னேன். அப்படி வைத்தால், அண்ணன்-தங்கை பாசம் என்று உருக்கமான காட்சிகளை வைக்க வேண்டாம். 'காமெடி'யான சீன்களை வையுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.
படத்தின் கதைப்படி வடிவேல் எனக்கு அண்ணனாக நடித்தாலும், 'செட்'டில் அவரை நான், அண்ணா என்று அழைத்து சங்கடப்படுத்துவதில்லை.
'சார்' என்றுதான் கூப்பிடுகிறேன். பொதுவாக 'அண்ணா' என்று எந்த ஆணையும் நான் கூப்பிடுவதில்லை. ஆண்கள் அனைவரும் எனக்கு மச்சான்கள்தான்.
எனக்கு திருமணம் நடந்தால், எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். ரசிகர்கள் உள்பட அத்தனை பேருக்கும் விருந்து கொடுப்பேன். அதுவரை நான், என்னை அழகாகவும், கவர்ச்சியாகவும் வைத்துக் கொள்வேன், என்றார் நமீதா.


Click it and Unblock the Notifications











