2வது கணவரிடமிருந்தும் நந்திதா விவாகரத்து!

'பயர்' படம் மூலம் பரபரப்பான நடிகையான நந்திதா தாஸ், தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் தனது முதல் கணவரை விவாகரத்து செய்த அவர், கடந்த 2002-ல் சௌமியா சென் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அந்தத் திருமணமும் அவருக்கு கசந்துவிட்டது. எனவே இருவரும் சுமூகமான முறையில் பிரிந்துவிடுவது என தீர்மானித்து டெல்லி கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நேற்று இந்த மனு நீதிபதி மித்ரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நந்திதா தாஸ் மற்றும் சவுமியா சென் இருவரும் கோர்ட்டில் நேரில் ஆஜராகி இருவரும் மனம் விரும்பி பிரிவதாக கூறினர்.
எனவே அவர்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய 6 மாதங்களுக்கு அவகாசமளித்து வழக்கை ஒத்திவைத்துள்ளார் நீதிபதி.


Click it and Unblock the Notifications











