சேரன் பொய் சொல்கிறார்!-ப்ரியாமணி

By Staff

Priyamani
சேரனுடன் நடிப்பதுதான் தேசிய விருதுக்கு தகுதியா?-ப்ரியாமணி பாய்ச்சல்

சேரன் பெரிய இயக்குநராக இருக்கலாம். அதற்காக என்னைப் பற்றி பத்திரிகைகளில் கமெண்ட் அடிக்க அவருக்கு உரிமை கிடையாது. அவர் படத்தில் நடிக்க மறுத்ததால் எனக்கு தேசிய விருது பெறவே தகுதி இல்லை என்று கூறுவதா என வெடிக்கிறார் ப்ரியாமணி.

சேரன் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனது பொக்கிஷம் படத்தில் நடிக்க ப்ரியாமணியைத் தொடர்பு கொண்டபோது அவர் சரியான பதில் தரக்கூட மறுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

அவர் தனது பேட்டியில், இங்கே சில நடிகைகள் ஆணாதிக்கம் மிகுந்த தமிழ் சினிமா உலகில் எங்களுக்கான இடம் ஏது எனப் புலம்புகிறார்கள் ஆனால், பொக்கிஷம் போன்ற கதைகளைச் சொன்னால், காத தூரம் ஓடுவார்கள்.

சமீபத்தில் தேசிய விருது வாங்கிய பிரியாமணிக்கு, இந்த கதையைச் சொல்ல நினைத்தேன். இரண்டு நாட்கள் என் செல்போன் அழைப்புக்குக்கூட அவர் பதில் அளிக்கவில்லை. பிரியாமணிக்கு அவர் தகுதியைவிட அதிகமாக பெருமை சேர்ந்து விட்டது. அவருக்கு சினிமா பற்றிய அக்கறை துளியும் இல்லை என விளாசியிருந்தார்.

இதுகுறித்து ப்ரியாமணியிடம் கேட்டதற்கு, ஏற்கெனவே பலமுறை இதற்கு பதில் சொன்ன அலுப்புடன் நம்மிடமும் பேசினார்.

நிறையப் பேர் கேட்டுட்டாங்க. நானும் நிறைய சொல்லிட்டேன். முதலில் ஒரு விஷயம். சேரன் பொய் சொல்கிறார். அவர் என்னிடம் பேசவே இல்லை. தன்னை மதிக்கவில்லையே என்ற மனப்பான்மையில் சில ஆண்கள் வாய்க்கு வந்தபடி பேசுவார்களே, அந்த மாதிரி இருக்கிறது சேரன் சொல்வது.

என்னைப் பற்றி என்ன பேசினாலும் கண்டுகொள்ளாமல் போய்விடுவேன் என தப்புக் கணக்குப் போடுகிறார்.

சில தினங்களுக்கு முன் அவர் அலுவலகத்திலிருந்து ஒருவர் பேசினார். ஆனால் நான் அப்போதே என்னுடைய கமிட்மெண்டுகள் பற்றிக் கூறி நடிக்க முடியாது எனச் சொல்லிவிட்டேன். ஏற்கெனவே ஒப்புக் கொண்ட 3 படங்களை நான் முடித்துக் கொடுத்தாக வேண்டியுள்ளது.

என்னால் நடிக்க முடியவில்லை, அதனால் மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். இதில் என்ன தவறு. சேரன் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதாலேயே தேசிய விருதுக்கு நான் தகுதியில்லாமல் போய்விட்டேனா...

அவருடன் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருக்கிறது என்று அவர் நினைத்தால், அப்படியொரு தகுதியே எனக்குத் தேவையில்லை...என்றார்.

அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ப்ரியாமணி. இந்தப் படத்தில் நடிப்பதற்காகவே பல படங்களைத் தவிர்த்து வருகிறாராம்.

இயக்குநர்கள் அடித்தாலும் பயபக்தியோடு இருந்தது பாரதிராஜா காலம் என்பதை சேரன் அடிக்கடி மறந்துவிடுகிறாரே...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X