ரஜினியின் ராணாவில் நடிக்க தீபிகாவுக்கு அழைப்பு
ரஜினிகாந்த்தை வைத்து சுல்தான் தி வாரியர் என்ற பெயரில் முதலில் அனிமேஷன் படமாக எடுக்கப்பட்டு வந்ததை இப்போது ராணா என்ற பெயரில் மாற்றி ரஜினியையே நேரடியாக நடிக்க வைத்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் அனிமேஷன் அல்லாத ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வருமாறு தீபிகா படுகோனேவை அழைத்துள்ளனராம். ஆனால் இதுவரை அவர் பதில் ஏதும் தரவில்லையாம்.
ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினி உருவாக்கிய படம்தான் சுல்தான் தி வாரியர். முதலில் முழுமையான அனிமேஷன் படமாக இது எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அதை அப்படியே மாற்றி முழுமையான பொழுது போக்குப் படமாக கொண்டு வருகின்றனர்.
அனிமேஷன் ரஜினி காட்சிகளை படத்தில் ஆங்காங்கு செருகி, புதிய படமாக மாற்றியுள்ளனர். படத்தின் பெயரையும் ராணா என்று மாற்றியுள்ளனராம். அனிமேஷன் அல்லாத காட்சிகளை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
அனிமேஷன் அல்லாத ரஜினிக்கு தற்போது ஜோடி தேடி வருகின்றனர். முதலில் திரிஷா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது தீபிகாவை அணுகியுள்ளனராம்.
ரஜினி படத்திற்காக தன்னை அணுகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் தீபிகா. இருப்பினும் இன்னும் தான் முடிவெடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அவருடைய கால்ஷீட் புத்தகம் 2011 இறுதி வரை நிரம்பி வழிகிறதாம். இருப்பினும் ரஜினி படம் என்பதால் அந்த வாய்ப்பை நழுவ விட்டு விடாமல் தக்க வைத்துக் கொள்வதற்காக, கால்ஷீட்டில் அட்ஜெஸ்ட் செய்யும் முயற்சியில் இருக்கிறாராம் தீபிகா.
தான் ஒரு தீவிர ரஜினி ரசிகை என்று கூறியுள்ள தீபிகா, அவருடைய படத்தில் இணைந்து நடிப்பது பெருமைக்குரியது என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











