நடிகை ரம்பா தற்கொலை முயற்சி?

நேற்று கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உடல் நிலை தேறியுள்ளது.
சென்னை சாலி கிராமத்தில் வசித்து வரும் அவர் நேற்று மாலை கவலைக்கிடமாக நிலையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.
உணர்வற்ற நிலையில் இருந்த அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து பெரும் பணம் ஈட்டிய ரம்பா சொந்தப் படம் எடுத்து எல்லா பணத்தையும் இழந்தார்.
ஜோதிகா, லைலாவுடன் இணைந்து இவர் தயாரித்த திரிரோசஸ் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கடனில் மூழ்கிய அவர் செக் மோசடி சர்ச்சைகளிலும் சிக்கினார். தமிழ், தெலுங்கில் வாய்ப்புகளும் இல்லாமல் போகவே சிக்கல் அதிகமானது.
இதையடுத்து போஜ்பூரி, ஒரியா, பெங்காலி படங்களில் நடித்தார். பின்னர் அந்த வாய்ப்புகளும் நின்றுவிட்டன. போஜ்பூரியில் நடித்தபோது ரம்பாவுக்கு ஒரு நடிகர்-தயாரிப்பாளருடன் காதலும் ஏற்பட்டு, தோற்றதாகக் கூறப்பட்டது.
கடும் கடன் தொல்லையில் இருந்த ரம்பாவுக்கு இந்தி நடிகர் கோவிந்தா தான் அவ்வப்போது உதவி வந்ததாகவும் கூறப்பட்டது. வாய்ப்பில்லாத ரம்பா இப்போது டிவி நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.
இந் நிலையில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரம்பா இந்த தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால் ரம்பாவின் குடும்பத்தினர் தற்கொலை முயற்சியை மறுத்துள்ளனர். புட் பாய்சன் ஏற்பட்டதால் தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அதே போல மருத்துவமனை வட்டாரங்களும் இது தற்கொலை முயற்சி இல்லை என்று கூறுகின்றன. ஆனால், ரம்பா தற்கொலைக்கு முயன்றதாகவே கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்ளப்படுகிறது.


Click it and Unblock the Notifications











