சங்கீதாவுடன் திருமணம்?-பாடகர் மறுப்பு!

By Staff

Krish
சங்கீதாவுடன் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக வந்துள்ள செய்திகளை பின்னணிப் பாடகர் கிருஷ் கடுமையாக மறுத்துள்ளார்.

முன்னணி நடிகையான ரசிகா என்கிற சங்கீதா தான் ஒருவரைக் காதலிப்பதாகவும், இந்தக் காதலுக்கு காதலனின் பெற்றோர் தடையாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் அந்தக் காதலன் யாரென்று கூற மறுத்துவிட்டார். இந்நிலையில் அவர் கிருஷ் என்ற வளர்ந்து வரும் பின்னணிப் பாடகரைக் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இதை இருவருமே மறுக்கவில்லை.

உன்னாலே உன்னாலே படத்தில் வரும் ஜூன் போனால்... உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிள்ளார் கிருஷ்.

இன்று காலை சில பத்திரிகைகளில் சங்கீதாவுக்கும் கிருஷுக்கும் திருப்பதியில் ரகசியத் திருமணம் நடந்துவிட்டதாக பரபரப்பாக செய்தி வெளியாகியிருந்தது.

இந்தச் செய்தியை இப்போது இருவருமே மறுத்துள்ளனர்.

இதுகுறித்து கிருஷ் கூறியிருப்பதாவது:

ஒரு முன்னணி நாளிதழில் எனக்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடந்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்தியில் துளியும் உண்மையில்லை. காலை நான் எழுந்தவுடன் என் தந்தை நேராக என்னிடம் வந்தார். என்னப்பா உனக்கும் சங்கீதாவுக்கும் கல்யாணமாயிடுச்சாமே... எப்போ என்று கேட்டார். எனக்கு அவமானமாகப் போய்விட்டது.

சங்கீதா என் நல்ல தோழி... அவ்வளவுதான். சமீபத்தில் திருப்பதியில் நடந்த மகேஸ்வரி கல்யாணத்துக்கு இருவரும் நண்பர்களுடன் போயிருநேதோம். அதற்குள் இப்படி செய்திகள் முளைத்துவிட்டன என்றார் கிருஷ்.

இந்தச் செய்தியை சங்கீதாவும் மறுத்துள்ளார். கடந்த இரு தினஙகளாக தான் ஏவிஎம் ஸ்டுடியோவில் ஷூட்டிங்கில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X