சங்கீதா தம்பி சந்தியா ஜோடி!

நடிகை சங்கீதாவின் தம்பி பரிமள். இவரும் இப்போது கோலிவுட்டின் ஹீரோக்களில் ஒருவர். ஓடிப் போலாமா என்ற படம் மூலம் நடிக்க வந்துள்ளார்.
இவருக்கு ஜோடியாக நடிப்பவர் சந்தியா. காதல் நாயகி சந்தியா, பரத், பிருத்விராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டு இப்போது புதுமுகத்திற்கு வந்து செட்டிலாகியுள்ளார்.
கண்மணி இப்படத்தை இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார்.
பெற்றவர்கள் சந்தோஷமாக இருப்பதற்காக ஒரு பையனும், ஒரு பெண்ணும் தங்களது வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இருவரும் தற்செயலாக சந்திக்க அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை இப்படம் விளக்குகிறதாம்.
வித்தியாசமான காதல் கதையாக இதைக் கொடுக்கிறாராம் கண்மணி.
தியேட்டரை விட்டு ரசிகர்கள் ஓடிப் போகாமல் இருந்தால் சரி!
Comments


Click it and Unblock the Notifications