'வைஜெயந்தி ஐபிஎஸ்' ரீமேக்கில் ஸ்னேகா!

ரீமேக் கலாச்சாரம் கொடிகட்டிப் பறக்கும் இந்த சூழலில் இந்தப் படத்தை 'ரீமேக்க' நிறைய பேர் முயற்சிகள் எடுத்தனர்.
முமைத்தான் கூட இதற்கான முயற்சியில் இறங்கினார். பின்னர் அதே பாணியில் மைசம்மா ஐபிஎஸ் என்று உல்டா செய்தார்கள்.
இப்போது ஒரிஜினல் வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தை இயக்குநர் ஆர்த்திகுமார் ரீமேக் செய்கிறார். இவர் சத்யராஜை வைத்து ஏற்கெனவே சவுண்டு பார்ட்டி என்ற படத்தை எடுத்தார்.
இந்த ரீமேக்கில் எந்த நாயகியை ஹீரோயினாகப் போடலாம் என யோசித்த ஆர்த்தி குமாரின் மனதில் பளிச்சென்று தோன்றியவர் புன்னகை இளவரசி ஸ்னேகாதானாம்.
விஷயம் கேள்விப்பட்டதும் சந்தோஷத்தில் துள்ளிய ஸ்னேகா, உடனடியாக தனது கால்ஷீட்டுகளை அள்ளி வழங்கிவிட்டாராம் இயக்குநருக்கு. இந்தப் படம் தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் தயாராகிறது.
புன்னகை இளவரசியிடம் இனி கொஞ்சம் தள்ளி நின்றுதான் பேசணும் போலிருக்கே!
Comments


Click it and Unblock the Notifications