சோனாவின் 'பிரமிப்பான' வளர்ச்சி!

கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக் இவரது கிர்ரடிக்கும் இந்த வளர்ச்சி பற்றித்தான். பெரிய தயாரிப்பாளர்களே சூடுபட்ட பூனைகளாய் ஒதுங்கி நிற்கிறார்கள். இவர் எப்படி வெங்கட் பிரபு போன்ற இயக்குநர்களை வைத்து பல கோடிகளில் படம் தயாரிக்கிறார் என்கிறார்கள் பிரமிப்புடன்.
'பாக்யராஜ் 2010' என்ற படத்தை சமீபத்தில் துவங்கினார் சோனா. அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தை அறிவிக்க உள்ளார்.
இந் நிலையில் நேற்று துவங்கப்பட்ட கனிமொழி படத்தையும் இவர்தான் தயாரிக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் இதில் ஒரு பார்ட்னர் மட்டுமே. இயக்குநர் ரவிக்குமாரிடமும் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளாராம்.
சோனாவுக்கு சென்னை கதீட்ரல் சாலையில் ஒரு அழகு சாதன பொருள்கள் விற்பனை நிலையம் உள்ளது. ஆஸ்திரேலியாவில் சில உறவினர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மற்றபடி அவரது பின்னணி ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!


Click it and Unblock the Notifications











