தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

ஸ்ரீதேவிக்கு, கணவர் போனி கபூர் மூலம் 2 மகள்கள். இவர்களில் ஜான்வியை நடிகையாக்க முடிவு செய்துள்ளார் ஸ்ரீதேவி. அவரை தெலுங்கு சினிமா மூலம் நடிகையாக்க தீர்மானித்துள்ளார்.
தமிழில் நிறையப் படங்களில் நடித்தவரானாலும், தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தெலுங்கு சினிமா மூ்லம்தான் இந்திக்கு டிக்கெட் கிடைத்தது ஸ்ரீதேவிக்கு. காரணம், தமிழை விட தெலுங்கில்தான் ஸ்ரீதேவி நிறைய கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.
இதன் காரணமாக தெலுங்கு சினிமா மூலம் தனது மகளை நாயகியாக்கவுள்ளார் ஸ்ரீதேவி. நாகார்ஜூனாவின் மகன் அகில் வளர்ந்து வாலிபனாகி விட்டார். அவருடன் ஜான்வியை ஜோடி சேர்க்கப் போகிறார்களாம்.
இந்தப் படத்தை முடித்த பின்னர் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தொடர்ந்து தெலுங்கில் நடிப்பாராம் ஜான்வி. இல்லாவிட்டால், தமிழுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார் ஸ்ரீதேவி.
More from Filmibeat
ஸ்ரீதேவி ஸ்ரீதேவி மகள் ஜான்வி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தெலுங்கு சினிமாவில் அறிமுகம் sridevis daughter jhanvi sridevis daughter to debut in telugu cinema


Click it and Unblock the Notifications











