சுஜி பாலாவின் நூறாவது நாள்!

சினிமாவில் நடிக்க துடிக்கிறார் ஒரு தயாரிப்பாளரின் மகன். ஆனால் மகன் மீது அப்பாவுக்கு நம்பிக்கை இல்லை. இதனால் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தனியாக நின்று தன்னை நிரூபிக்க முயலுகிறான் நாயகன். இதுதான் நூறாவது நாள் படத்தின் கதையாம்.
ஜெரா என்ற புதுமுகம் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிப்பவர் சுஜிபாலா. சின்னச் சின்ன வேடங்களில் நடித்து ஹீரோயினாக உயர்ந்த சுஜிபாலாவுக்கு தன்னை நிரூபிக்கும் வகையிலான வேடமாம் இப்படத்தில்.
இதனால் சந்தோஷமாகியிருக்கும் சுஜிபாலா, சிறப்பாக நடித்து அசத்த ஆசையுடன் உள்ளாராம்.
படத்தில் நடிப்புடன் கிளாமர் போர்ஷனும் இருக்கிறதாம். இருந்தாலும் வரம்பு மீறாமல் எல்லைக்கோட்டுடன் அதை கதையுடன் இணைத்துள்ளாராம் புதுமுக இயக்குநர் ஸ்ரீகண்ணா. இதனால் நடிப்பிலும், கிளாமரிலும் சேர்ந்து கலக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறி மகிழ்கிறார் சுஜி பாலா.
படம் நூறு நாட்களை தாண்டி ஓட வாழ்த்துவோம்.


Click it and Unblock the Notifications











