Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நமீதா மோகம் அவ்ளோதானா?
வந்து நின்றாலே போதும் என்று கெஞ்சாத குறையாக வரிசை கட்டி நின்றனர் நமீதா வீட்டின் முன்பு ஒரு நேரத்தில். அந்த அளவுக்கு நமீதாவுக்கு இருந்த கிராக்கி அப்படி. முழுக்க முழுக்க கவர்ச்சி காட்டி நடிக்க நமீதாவும் தயாராகவே இருந்தார். இதனால் மாதத்தில் 30 நாட்களும் படு பிசியாக ஓடியாடிக் கொண்டிருந்தார்.
நமீதாவின் நடிப்பில் ஆயிரம் குறைகள் இருந்தாலும்,தெரிந்தாலும், அது நமீதாவின் கவர்ச்சி அலையால் ரசிகர்களின் கண்களில் பட்டதே இல்லை. மீதா என்றால் இப்படித்தான் என்பது எழுதப்படாத இலக்கணமாகிப் போனது.
ஆனால் இன்று நிலைமை தலைகீழ். நமீதாவை எந்தப் படத்திலும் காண முடியவில்லை. சிங்கிள் பாட்டுக்குக் கூட அவரை கூப்படி யாரும் இல்லாத நிலை. இளைஞன் என்ற படத்தில் மட்டும் நெகட்டிவான ரோலில் நடித்து வருகிறார் நமீதா. வேறு படங்கள் எதிலும் இல்லை.
கலைஞர் டிவி புண்ணியத்தில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் மட்டும் ஜட்ஜ் ஆக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
ஏன் என்ன ஆச்சு நமீதாவுக்கு, அவர் மீதான கோலிவுட்டின் கிரேஸ் போய் விட்டதா என்று விசாரித்தால் அப்படியெல்லாம் இல்லை மச்சான் ன்கிறார் நமீதா வழக்கமான புன்னகையுடன்.
என்னைத் தேடி கிளாமரான பாத்திரங்கள் மட்டுமே வருகின்றன. எனக்கே அது சலித்து விட்டது. நடிப்புடன் கூடிய வேடங்களை மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன். எனவே நானாகத்தான் பல படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. மற்றபடி என்னை நாடி பட வாய்ப்புகள் இன்றும் குவிந்து கொண்டுதான் இருக்கின்றன என்கிறார்.
அதானே, நமீதாவுக்காவது, குறைவதாவது!