தெலுங்கைக் குறி வைக்கும் திரிஷா

By Sudha

இலியானா தமிழுக்கு வருவதாலும், அவரது மார்க்கெட் தற்போது தளர்ச்சியுடன் காணப்படுவதாலும் மீண்டும் தெலுங்கில் முகாமிட்டு நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கத் திட்டமிட்டு வருகிறாராம் திரிஷா.

மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்த குஷியில் இருக்கும் திரிஷா, வருகிற 2011ல் பல புதிய திட்டங்களை நனவாக்க திட்டமிட்டுள்ளாராம். அதில் ஒன்று தெலுங்கில் இழந்த முதலிடத்தைத் திரும்பப் பெறுவது, இன்னொன்று ரஜினியுடன் ஜோடி சேருவது.

தெலுங்கில் தற்போதைக்கு இலியானாதான் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு முன்பு திரிஷாதான் அந்த இடத்தை வைத்திருந்தார். ஆனால் இலியானா தனது இடுப்புக் கவர்ச்சியைக் காட்டி திரிஷாவை ஓரம் கட்டி விட்டார்.

இதனால் தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த திரிஷா, பின்னார் இந்திக்கும் போனார். ஆனால் இந்தி அவரை ஏமாற்றி விட்டது. இருந்தாலும் மனம் தளராமல் தமிழிலேலேய தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழின் உச்ச நாயகர்களில் ஒருவரான கமலுடன் இணைந்து மன்மதன் அம்பு படத்தில் நடித்ததும், தனது நடிப்பு நன்கு பேசப்படுவதாலும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் திரிஷா. இந்த நிலையில் அடுத்த வருடத்தில் மீண்டும் தெலுங்கில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இலியானா தற்போது தமிழுக்கு வரஆர்வம் காட்டஆரம்பித்துள்ளார். இதனால் அந்த இடத்தை கப்பென்று பிடித்து மீண்டும் நம்பர் ஒன் ஆகி விட திட்டமிட்டுள்ளாராம் திரிஷா. இதற்காக சில திட்டங்களையும் வகுத்துள்ளாராம்.

அதேபோல எப்படியும் அடுத்த ரஜினி படத்தில் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்ற வேகத்திலும் உள்ளாராம் திரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X