நயனதாரா இடத்தில் திரிஷா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசடர்களாக விஜய்யும், நயனதாராவும் நியமிக்கப்பட்டனர். சென்னையில் நடந்த அணி வீரர்கள் அறிமுக நிகழ்ச்சியிலும் இருவரும் கலந்து கொண்டனர்.
ஆனால் அதன் பின்னர் நயனதாரா சென்னை அணி தொடர்பான நிகழ்ச்சிகளில் விருப்பம் காட்டாமல் இருந்து வந்தார். மேலும், சென்னையில் நடந்த சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது விஜய் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி, ஊக்குவித்தார். ஆனால் நயனதாரா வரவில்லை.
இந்த நிலையில் நேற்று நயனதாராவை அதிரடியாக பிராண்ட் அம்பாசடர் பொறுப்பிலிருந்து சென்னை அணியின் நிர்வாகம் நீக்கி விட்டது. தற்போது அந்த இடத்தில் திரிஷாவை புக் செய்துள்ளனராம்.
இதுகுறித்து சென்னை அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஆரம்பத்திலிருந்தே நயனதாராவுக்கு இதில் ஆர்வம் இல்லை. அணியின் அறிமுக விழாவின்போது கூட அவர் சுரத்தே இல்லாமல்தான் கலந்து கொண்டார். எல்லோரையும் உற்சாகப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருந்த அவரே உற்சாகம் இல்லாமல்தான் காணப்பட்டார்.
உடல் நலம் சரியில்லை, அதனால் வர முடியவில்லை என்று கூறுவது நம்பும்படி இல்லை. உடல்நலம் பாதிக்கப்பட்ட, 2 மணி நேரத்திற்குள் அவரால் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடிந்தபோது, ஏன் இங்கு மட்டும் வர முடியவில்லை.
நயனதாரா தனது பொறுப்பை உணர்ந்திருக்க வேண்டும். அவர் அதை செய்யவில்லை. எனவேதான் நீக்க வேண்டியதாகி விட்டது.
வேலை பார்ப்பதற்குத்தான் சம்பளம் தருவார்கள். அவர் வேலையே பார்க்கவில்லை. எனவே அவருக்கு கொடுக்கப்பட்ட ரூ. 40 லட்சத்தை திரும்பத் தருமாறு கேட்போம்.
நயனதாராவுக்குப் பதில் திரிஷாவை புக் செய்துள்ளோம். இதுகுறித்து சனிக்கிழமை அறிவிக்கப்படும் என்றார் அவர்.
நயனதாரா நீக்கப்பட்ட அதே வேகத்தில் திரிஷாவை புக் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











