தனுஷுக்கு புது ஜோடி த்ரிஷா - ஷ்ரேயாவுக்கு கல்தா!

By Staff

Trisha
தனுஷ் அடுத்து நடிக்கும் படத்தில் ஸ்ரேயாவுக்கு பதில் த்ரிஷா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பொல்லாதவன் தயாரிப்பாளர் குரூப் கம்பெனி கதிரேசன் தயாரிக்கும் அடுத்தப் படத்திலும் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். பொல்லாதவன் படத்தை இயக்கிய வெற்றிமாறனே இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால். ஆனால் அவர் கால்ஷீட் கொடுத்திருந்த நேரத்தில் இயக்குநர் படத்தைத் தொடங்கவில்லை.

எனவே தனது மற்ற படங்கள் பாதிக்கும் என்பதால் ஸ்ரேயா இந்தப்படத்திலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்திருந்தார். அட்வான்ஸையும் திருப்பித் தர முன்வந்தார்.

ஆனால் இதை தயாரிப்பாளரும், இயக்குநரும் ஏற்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் ஸ்ரேயா மீது புகார் செய்தனர். ஸ்ரேயாவும் தன் பங்குக்கு நடிகர் சங்கத்தில் புகார் செய்தார்.

ஆனால் அப்படியும் இந்தப் படத்தை துவங்கியபாடில்லை, இயக்குநர். எனவே இந்தப் படத்தில் இனி நடிக்க முடியாது என ஸ்ரேயா உறுதியாகத் தெரிவித்துவிட, இப்போது அந்தப் பாத்திரத்தில் த்ரிஷா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X