கமலுக்கு திரிஷா!

தசாவதாரம் படத்தைக் கொடுத்த கையோடு அடுத்து படத்தில் பிசியாகி விட்டார் உலக நாயகன். மிகப் பிரமாண்டமான பட்ஜெட்டில் அவரது நடிப்பில் உருவாகப் போகும் மர்மயோகி படத்துக்கான கலைஞர் சேர்ப்பில் கமல் அன்ட் கோ பிசியாக உள்ளது.
முதல் கட்டமாக ஹீரோயின் வேட்டை நடந்தது. இதில் பலருடைய பெயர்களும் அடிபட்டன. கடைசியாக பத்மப்ரியாவின் பெயர் அலசப்பட்டது. ஆனால் அவர் பெரும் தொகையை சம்பளமாக கேட்டதால் பத்மப்ரியாவை கைவிட்டு விட்டனர்.
இந்த நிலையில் திரிஷாவுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவரை ஹீரோயினாக இறுதி செய்த விட்ட மர்மயோகி குழு, விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது.
திரிஷா, தசாவதாரத்திலேயே நடித்திருக்க வேண்டியது. ஆனால் அப்போது அவர் பிசியாக இருந்ததால், ஆசின் நடித்தார். ஆனால் அவதாரத்தில் விட்டதை யோகியில் பிடித்து விட்டார் திரிஷா.
மர்மயோகியில் தனது கேரக்டர் குறித்து கூறியதுமே அது திரிஷாவுக்குப் பிடித்துப் போய் விட்டதாம். கிட்டத்தட்ட 6 மாத காலத்திற்கு திரிஷா தொடர்பான காட்சிகளைப் படமாக்கவுள்ளனராம்.
தற்போது தெலுங்கில் கிங், தமிழில் சர்வம், சென்னையில் ஒரு மழைக்காலம் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் திரிஷா. மர்மயோகிக்காக இப்படங்களை வேகமாக முடித்துக் கொடுக்கப் போகிறாராம் திரிஷா.
அப்ப திரிஷா இனி - உலக நாயகி!


Click it and Unblock the Notifications











