எடை குறைந்த வித்யா!

அஜீஸ் மிர்ஸா இயக்கும் படம் கிஸ்மத் கனெக்ஷன்ஸ். இப்படத்தில் ஷாஹித் கபூரும், வித்யா பாலனும் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பு வித்யாவைக் கூப்பிட்ட அஜீஸ், ஷாஹித் கபூருடன் உங்களை ஜோடி சேர்த்து பார்க்கும்போது சற்றே வயதானவராகவும், குண்டானவராகவும் தெரிகிறீர்கள். எனவே எப்பாடு பட்டாவது எடையைக் குறைத்து சிக் ஆகி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டாரம்.
இதையடுத்து கடுமையாக முயற்சித்து எடையைக் குறைத்ததோடு அல்லாமல், படு ஸ்லிம்மாகவும் மாறினாராம் வித்யா. அந்தக் கதை குறித்து அவரே கூறுகையில், இதுவரை நான் சஞ்சய் தத், அஜய் தேவ்கன், சைஃப் அலிகான் போன்ற மூத்த ஹீரோக்களுடன் நடித்து வந்தேன்.
ஆனால், முதல் முறையாக எனது வயதையொத்த ஹீரோவான ஷாஹித் கபூருடன் இணைந்துள்ளேன். எனவே எனது உருவம் சற்று வித்தியாசமாக தெரிந்துள்ளது இயக்குநருக்கு. னக்கும் அந்த பீலிங் இருந்தது.
எனவே யோகா, டயட் ஆகியவற்றில் தீவிரமாக இறங்கினேன். இதனால் எனது எடை கணிசமாக குறைந்தது. பார்க்கவும் ஸ்லிம் ஆகி விட்டேன் என்கிறார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், அஜீஸ் இயக்கிய ராஜு பன்கயா ஜென்டில்மேன், எஸ்பாஸ், சல்தே சல்தே ஆகிய படங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. எனவே அவருடைய இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். இப்போதுதான் அது கை கூடியுள்ளது. ரொம்ப புத்திசாலியான இயக்குவர் அவர் என்று ஆஜீஸ் புராணம் பாடுகிறார்.
உங்க டிரஸ்ஸிங் குறித்து நிறைய பேசுகிறார்களே என்று கேட்டால், யார் என்ன பேசினால் எனக்கென்ன. எனக்கு எது பிடிக்கிறதோ, எது பொருத்தமாக இருக்கிறதோ அதைத்தான் நான் போட முடியும் என்கிறார் சற்றே கோபமாக.
'மேடி'யுடன் அடுத்த 'ஆட்' எப்போ மேடம்?


Click it and Unblock the Notifications











