மதுமிதாவுக்கு டும்டும்டும்!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் மதுமிதா. குடைக்குள் மழையில் அறிமுகமானவர் பின்னர், தொடர்ந்து அமுதே, இங்கிலீஷ்காரன், நாளை உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அமீர் ஜோடியாக யோகி மற்றும் சொல்ல சொல்ல இனிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் ஆர்யா உள்பட பல படங்களில் நடித்தவர் சிவபாலாஜி. இவர் ஒரு தொழிலதிபரும் கூட. தமிழில் சத்யராஜ் நடித்த 'இங்கிலீஷ்காரன்" படத்தில் இரண்டாவது ஹீரோவாக அவர் நடித்தபோது, அப்படத்தில் ஜோடியாக நடித்த மதுமிதாவுடன் நட்பு ஏற்பட்டது.
நட்பு வழக்கம்போல காதலாக மலர்ந்தது. பிறகு இருவரும் தங்கள் பெற்றோரிடம் காதல் விஷயத்தைச் சொல்லி, அவர்களின் சம்மதத்தைப் பெற்றனர். இவர்கள் திருமணம், மார்ச் 1-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் என மதுமிதா குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
வாழ்த்துக்கள்!
Comments
குடைக்குள் மழை சினிமா சிவபாலாஜி தமிழ் திருமணம் பார்த்திபன் cinema kudaikkul mazhai madhumitha sivabalaji wedding


Click it and Unblock the Notifications